இரட்சிப்பு – மீட்பு
"Salvation"
      ஆவிக்குரிய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும், கற்றுக்கொடுக்க வேண்டியதுமான பாடம் என்ன?

   •    ஆவிக்குரிய விசுவாசம்.


      ஆவிக்குரிய விசுவாசம் என்றால் என்ன?

   •    ஆவிக்குரிய விசுவாசம் என்றால், இரட்சிப்பையும், அபிஷேகத்தையும் பெறுவது அதாவது, மீட்பையும் – அருட்பொழிவையும் பெறுவது.


இரட்சிப்பு – மீட்பு
       இயேசு என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

   •    இயேசு என்ற பெயருக்கு “மீட்பர்” அல்லது “இரட்சகர்” என்று பொருள் - மத் 1:21.


      மீட்பை பற்றிய, கடவுளின் திட்டம் என்ன?

   •    மனிதர் அனைவரும் மீட்படைய வேண்டும் என்பது, கடவுளின் விருப்பம் - 1திமொ 2:4.


      இயேசு எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார்?

   •    பாவிகளை மீட்டு இரட்சிக்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார் – 1திமொ 1:15.


       இயேசு எதிலிருந்து நம்மை மீட்டு இரட்சித்தார்?

   •    பாவத்திலிருந்தும் - யோவா 1:29,


   •    பாவத்தின் விளைவான துன்பத்திலிருந்தும் - மத் 11:28,29.


      பாவம் என்றால் என்ன?

   •    கடவுள் விரும்பாததை செய்வதும்,


   •    கடவுள் விரும்புவதை செய்யாமலிருப்பதும், பாவம் ஆகும் - 1யோவா 3:4.


அடிமை நிலையும் சுதந்திரமும்

       பாவ நிலைக்கு, இன்னொரு பெயர் என்ன?

   •    அடிமை நிலை – யோவா 8:34, உரோ 7:14.


      அடிமை நிலை எப்படி உருவாகிறது?

   •    மனிதன் படைக்கப்பட்ட போது, சுதந்திர நிலையில் இருந்தான் - தொ.நூ 1:26,27.


   •    அவன் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தில் தொடர்ந்து வாழ, கடவுள் தன் விருப்பங்களை அவன் இதயத்தில் வைத்தார் - தொ.நூ 2:16,17.


   •    கடவுளுடைய விருப்பங்களுக்கு அடிமையாக வாழும் போது, மனிதன் சுதந்திர மனிதனாக இருந்தான் - தொ.நூ 2:7-24.


   •    இந்த சுதந்திர நிலையை, மனிதன் இழக்கும் போது, அடிமை நிலையை அடைந்தான்.


       இந்த சுதந்திர நிலையை, மனிதன் எப்போது இழந்தான்?

   •    மனிதன் கடவுளுடைய விருப்பத்திற்கு கட்டுப்பட்டு வாழும் நிலையிலிருந்து தவறி, உலகம், பிசாசு, சரீரத்தினுடைய விருப்பங்களுக்கு அடிமைப்பட்ட போது, அவன் சுதந்திர நிலையை இழந்தான் - தொ.நூ 3:1-6.


       மனிதன் சுதந்திர நிலையை இழந்ததால் வந்த விளைவு என்ன?

   •    உலகம் பாவத்திற்கு அடிமையானது – 1யோவா 5:19.


   •    தனி மனிதன், பாவத்திற்கு அடிமையானான்– உரோ 5:19, உரோ 7:13,14, 1யோவா 1:8.


       அடிமை நிலை என்றால் என்ன ?

   •    ஒருவர் எதற்கு அடிமையாக இருக்கிறாரோ, அதன் முழு கட்டுப்பாட்டில் அவர் இருக்கும் நிலை –உரோ 6:16.


   •    ஒன்று இல்லாமல், என்னால் வாழ முடியாது என்று ஒருவர் எண்ணும் நிலை – லூக் 14:26, மத் 2:17-18.


       அடிமைப்படுத்தும் நிலை என்றால் என்ன ?

   •    மனிதனுக்குள்ளிருக்கும் பாவ இயல்பு, அவன் விரும்பாமலே, அவனை பாவத்திற்கு அடிமையாக்கும் நிலை – உரோ 7:13-25.


       உலக, தனிமனித அடிமை நிலையிலிருந்து, மனிதன் சுதந்திர நிலையை எவ்வாறு அடைகிறான் ?

   •    இயேசுவின் மீட்புச் செயலால், மனிதன் சுதந்திர நிலையை அடைகிறான் - உரோ 3:24.


       சுதந்திர நிலை என்றால் என்ன ?

   •    கடவுளுடைய விருப்பத்தின் படி வாழும் நிலை – உரோ 6:22,18.