உத்தரிக்கும் ஸ்தலம்
"PURGATORY"
மனிதன்

     மனிதன் என்றால் யார்?

     உடலும், ஆன்மாவும் கொண்டவன் மனிதன் - 1தெச 5:23.

     உடல், மனிதனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?

     மண்ணிலிருந்து கிடைக்கிறது - ச.உ 12:7; தொ.நூ 2:7; 1கொரி 15:47.

        உடலின் இயல்பு என்ன?

     உடல், அழிந்து போகும் இயல்புடையது - 1கொரி 15:53.

      மனிதன் இறந்த பின்பு, உடல் எங்கே போகும்?

     உடல், தாம் வந்த இடமான, மண்ணுக்கே செல்லும் - ச.உ 12:7; தொ.நூ 3:19; சீரா 41:10; சா.ஞா 15:8.

      ஆன்மா அல்லது உள்ளம், மனிதனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?

     ஆன்மா, மனிதனுக்கு விண்ணிலிருந்து கிடைக்கிறது - ச.உ 12:7; 1கொரி 15:49.

     ஆன்மாவின் இயல்பு என்ன?

     ஆன்மா, அழியாத இயல்பு கொண்டது - 1கொரி 15:51-52; சா.ஞா 2 :23; 12:1.

     மனித இறப்புக்குப் பின், ஆன்மா எங்கே செல்லும்?

     ஆன்மா, தாம் வந்த இடமாகிய, விண்ணுக்கே செல்லும் - ச.உ 12:7; பிலி 3:20.

உடலின் - ஆன்மாவின் தன்மைகள்

      மண்ணிலிருந்து, மனிதன் பெற்றுக்கொண்ட உடல், என்ன தன்மை கொண்டது?

     உடல், பாவத்தன்மை கொண்டது - உரோ 7:25; சா.ஞா 1:4.

      விண்ணிலிருந்து, மனிதன் பெற்றுக்கொண்ட ஆன்மா, என்ன தன்மை கொண்டது?

     ஆன்மா, பரிசுத்த தன்மை கொண்டது - சா.ஞா 3:1.மண்ணிலிருந்து கிடைக்கிறது - ச.உ 12:7; தொ.நூ 2:7; 1கொரி 15:47.

     பாவ உடலோடு, பரிசுத்தமான ஆன்மா சேருவதால், உண்டாகும் விளைவு என்ன?

     ஆன்மா மாசுபடும் - உரோ 7:19-20; சா.ஞா 1:12.

     ஆன்மா, மாசுபடாமலிருக்க, ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

      உடலோடு உள்ள, நெருக்கத்தை (உறவை) குறைத்துக்கொள்ள வேண்டும் - 1கொரி 7:5.

      வாழ்க்கையில், ஆன்மாவுக்கு முதலிடமும், உடலுக்கு இரண்டாவது இடமும், கொடுக்க வேண்டும் - மத் 6:33.

      உடலின் இயல்புகளுக்கு, அடிமையாகாதபடி, மனதையும், உடலையும், கட்டுப்படுத்த வேண்டும் - 1கொரி 9:27.

      தன்னடக்கத்தைக் கைக்கொண்டு, மனதின் ஆசைகளை அடக்க வேண்டும் - 1கொரி 9:25.

       ஆன்மா, வந்த இடத்துக்கு திரும்பிப் போக, உடலின் இச்சைகள், தடையாக இல்லாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும் - உரோ 8:3,7-8; 1பேது 2:11.

      ஆத்மாவை எதிர்த்துப் போர்புரியும், ஊனியல்பின் இச்சைகளை, விட்டுவிட வேண்டும் - 1பேது 2:11.

      இவ்வுடலில் குடியிருக்கும் வரை, நாம் ஆண்டவரிடமிருந்து அகன்றிருக்கிறோம், என்ற உணர்வோடிருக்க வேண்டும் - 2கொரி 5:6.

       சாவுக்குள் இருக்கும், இந்த உடலினின்று, என்னை விடுவிப்பவர் யார் என்று, புனித பவுல் கூறியதை, எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - உரோ 7:24.

     உடலின் இச்சைகள் என்றால் என்ன?

     உடலின் எட்டு தேவைகளில், ஒன்று இல்லாமல் கூட, என்னால் வாழ முடியாது என்ற, மனநிலையே, உடலின் இச்சை - சீரா 29:21; 39:26; உரோ 8:5.

     உடலின் எட்டு தேவைகள் யாவை?

       பசிக்கு உணவு - சீரா 31:16

       களைப்பில் உறக்கம் - சீரா 31:20.

       நோய்க்கு மருந்து - சீரா 38:1.

       பருவத்தில் இணை - 1கொரி 7 :9.

       இணையில் சந்ததி - 2அர 4 :14-17

       தங்க வீடு - சீரா 29:21.

       ஆபத்தில் பாதுகாப்பு - யோசு 20:9.

       நாளைக்கு சேமிப்பு - சீரா 29:12; தொ.நூ 41:48.

      ஆன்மா மாசுபடுவதால் உண்டாகும் விளைவு என்ன?

     உடல் இறந்ததும், ஆத்துமா உடனடியாக விண்ணுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் - மத் 25:46; 5:20.

      உடலில் பாவம் எவ்வாறு உருவாகிறது?

      முன்னோரிடமிருந்து, பிறப்பால் பிள்ளைகளுக்கு கிடைப்பது, ஜென்ம பாவம் - தி.பா 51 :5.

       ஒரு மனிதன், உடலின் இச்சைகளுக்கு - மத் 5:28,29;

       மனதின் ஆசைகளுக்கு - 1திமொ 6:10;

      உலக மாயைகளுக்கு - 2திமொ 4:10;

      அலகையின் சூழ்ச்சிகளுக்கு - 2திமொ 2:26, அடிமையாகும் போது, உடலில் பாவம் உருவாகிறது.