திருமுழுக்குச் சடங்கு

தலைவர்:-

அன்பு சகோதரர்களே!

இப்போது நீங்கள், கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பினராக, கடவுளோடு உடன்படிக்கை செய்து கொள்ள, வந்திருக்கிறீர்கள்! இங்கே கூறப்படும், உடன்படிக்கை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, திருமுழுக்குப் பெற, உங்களை அன்போடு அழைக்கிறேன்.

மனமாற்றத்தின் திருமுழுக்கு – தி.ப 19:4.

தந்தையின் பெயரால்

விசுவாசி:-

1. தந்தையாகிய இறைவா! அருட்பொழிவின் மூலமாக, நீர் எனக்கு அருளிய உமது “அன்பில்” நிலைத்து, நான், உம்மோடும், என் அயலாரோடும், ஆவியின் கனிகளில் வாழ்வேன் என்று வாக்களிக்கிறேன்.

2. அவ்வண்ணமே! இன்றுமுதல், என் வாழ்நாள் முழுவதும், நான், உமது விருப்பங்களுக்கு மட்டுமே, கட்டுப்பட்டு வாழ்வேன் என்றும், உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களுக்கு ஒருபோதும் கட்டுப்பட மாட்டேன் என்றும், வாக்களிக்கிறேன்.

தலைவர்:-

சகோதரரே! உம்மை, தாயின் கருவிலிருந்தே அன்பு செய்து அழைத்த, தந்தையாகிய கடவுளின் பெயரால், நான் உமக்கு திருமுழுக்கு அளிக்கிறேன்.

விசுவாசி:-

ஆமென்.

(தலைவர் தம் கையை, விசுவாசியின் தலையில் வைக்க, விசுவாசி, தண்ணீரில் மூழ்கி, தந்தையாகிய கடவுளோடு உடன்படிக்கை செய்கிறார்).
பாவமன்னிப்பின் திருமுழுக்கு – லூக் 3:3.

இயேசு கிறிஸ்துவின் பெயரால்

விசுவாசி:-

1. என் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவே! இவ்வுலக வாழ்வில், நீர் கொண்டிருந்த “விசுவாச உறுதியை”, என் எல்லாத் துன்ப வேளையிலும், நானும் கொண்டிருந்து, என் மீட்பில் இறுதிவரை நிலைத்திருப்பேன் என்று, உம் ஆணி பாய்ந்த பாதம் தொட்டு வாக்களிக்கிறேன்.

2. அவ்வண்ணமே, இன்று முதல்ää என் வாழ்நாள் முழுவதும், உமது பரிசுத்த உடலாகிய, ஊPஆ சபையின் சபை ஒழுங்குகளுக்கு, நான் முழுமையாக கட்டுப்பட்டு, உமது பரிசுத்த உறுப்பாக வளர்வேன் என்று வாக்களிக்கிறேன்.

தலைவர்:-

சகோதரரே! உம்மைக்ää கல்வாரியில்ää தன் இரத்தத்தால் மீட்டேடுத்த இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில்ää நான் உமக்குத் திருமுழுக்கு அளிக்கிறேன்.

விசுவாசி:-

ஆமென்.

(தலைவர் தம் கையை, விசுவாசியின் தலையில் வைக்க, விசுவாசி, தண்ணீரில் மூழ்கி மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் உடன்படிக்கை செய்கிறார்).
அருட்பொழிவின் திருமுழுக்கு – தி.ப 1:5.

தூய ஆவியின் பெயரால்

விசுவாசி:-

1. எனக்கு துணையாளராக, என்னோடு என்றும் இருந்து, என்னைப் புனிதமாக்கும், தூய ஆவியாம் இறைவா! நான் இனிமேல், எந்த சூழ்நிலையிலும், இந்த உலகத்தால் தீட்டுப்படாமல், பிதாவின் விருப்பத்துக்கு எப்போதும் ஆமென் சொல்லி, “பரிசுத்தமாய்” வாழ்வேன் என்று, வாக்குறுதி எடுக்கிறேன்.

2. அவ்வண்ணமே! இன்று முதல், என் வாழ்நாள் எல்லாம், உமது துணையோடு, என் ஊPஆ திருச்சபையின் தலைவருடைய வழிநடத்தல்களுக்கு, சபை காரியங்களில் முழுமையாக கட்டுப்பட்டு, இந்த பரிசுத்த சபையில், வளர்வேன் என்று, வாக்களிக்கிறேன்.

தலைவர்:-

சகோதரரே! உம்மோடு என்றும் இருந்து, உம்மை புனிதப்படுத்தும் தூய ஆவியாம் கடவுளின் பெயரால், நான் உமக்குத் திருமுழுக்கு அளிக்கிறேன்.

விசுவாசி:-

ஆமென்.

(தலைவர் தம் கையை, விசுவாசியின் தலையில் வைக்க, விசுவாசி, தண்ணீரில் மூழ்கி, தூய ஆவியாம் கடவுளோடு உடன்படிக்கை செய்கிறார்).

முடிவில்

தலைவர்:-

அன்புச் சகோதரரே! கிறிஸ்துவின் பரிசுத்த சபை, இப்போது உம்மை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

   இன்று நீர், திருமுழுக்கால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்.

   உம் பாவ இயல்பு, இயேசு கிறிஸ்துவின் சிலுவையோடு, அறையப்பட்டுவிட்டது.

   இப்போது நீவீர், கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பாக மாறியுள்ளீர்.

   இன்று முதல் நீர், உயிர்த்தெழுந்தவராய், கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, “ஆவியின் இயல்புக்கு” கட்டுப்பட்டு வாழ வேண்டும்.

   இது முதல் நீர், கிறிஸ்துவை தலையாகக் கொண்ட, விண்ணக, மண்ணக, விசுவாசிகளோடு உறவுகொண்டு, பரிசுத்த சபையோடு இணைந்து வாழ, உம்மை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன் - ஆமென்……

கோலைக் கடக்கும் சடங்கு

   தந்தையாகிய இறைவா! என் மீட்பராகிய இயேசுவே! என் துணையாளரான தூய ஆவியே! இன்று முதல் நான், உமது உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கு, கட்டுப்பட்டு வாழ்வேன் என்று, உமது கோலின் கீழ், கடந்து பொய் வாக்குறுதி எடுக்கிறேன். மேலும், உமது சத்தியங்களையும், சபை ஒழுங்குகளையும், நான் மீறும் போது, என்னையே நான் “சாத்தானுக்கு ஒப்புவிக்கிறேன்” என்பதை, முழு அறிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.