விண்ணை நோக்கி காத்திரு


மீட்புக்காக காத்திருப்பு :

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !

     ஆண்டவரே, நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன் - தி.பா 119:166.

     இவரே நம் கடவுள் இவருக்கென்றே நாம் காத்திருந்தோம். இவர் நம்மை விடுவிப்பார். இவரே ஆண்டவர் இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம் - எசா 25:9.

     நமக்கோ விண்ணகமே நம் தாய்நாடு. அங்கிருந்து தான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரென காத்திருக்கிறோம் - பிலி 3:20.

     கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய் காத்திருக்கின்றேன். எனக்கு மீட்பு கிடைப்பது

அவரிடமிருந்தே – தி.பா 62:1.

   ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம் - புல 3:26.

   நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய் காத்திரு – தி.பா 62:5.

அபிஷேகத்துக்காக காத்திருப்பு
A.ஆண்டவருக்காக


     ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள் - தி.பா 31:24.

     உமக்காக பொறுமையுடன் காத்திருப்போருக்கு பரிசு அளியும் - சீரா 36:15.

     ஆண்டவரே விடியற்காலையில் என் குரலை கேட்டருளும். வைகறையில் உமக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பேன் - தி.பா 5:3.

     ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காக காத்திருக்கிறோம். உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன – எசா 26:8.

   ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது – தி.பா 130:5.

   விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, ஆம் விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட என் நெஞ்சம் என் தலைவருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது – தி.பா 130:6.

     நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய் காத்திரு. ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே – தி.பா 62:5.

     நானே ஆண்டவர் என்பதையும், எனக்காக காத்திருப்போர் வெட்கமடையார் என்பதையும் நீ அறிந்து கொள்வாய் - எசா 49:23.

  B.பேரன்பிற்காக

     தமக்கு அஞ்சி நடந்து, தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார் - தி.பா 147:11.

     தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பிற்காக காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார் - தி.பா 33:18.

C.இறைவார்த்தைக்காக

     இதோ உம் சொற்களுக்காக காத்திருந்தேன் - யோபு 32:11.

     ஆண்டவரின் சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் - தி.பா 130:5.

     என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து எனக்கு செவி கொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர் - நீ.மொ 8:34.

D.ஞானத்துக்காக

     உழுது விதைத்து, பின் நல்ல விளைச்சலுக்காக காத்திருக்கும் உழவர் போன்று ஞானத்தை அணுகு – சீரா 6:19.

  E.அபிஷேகத்துக்காக

      நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம்.

  என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேற காத்திருங்கள் - தி.தூ 1:4.

     நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள் - லூக் 24:49.

F. மெசியாவுக்காக

     யூதர்கள் இயேசுவிடம் இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும். நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாக சொல்லிவிடும் - யோவா 10:24.

G. பொதுவாக

     உம் ஊழியன் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும். என்னை கொடுமைபடுத்துவோரை என்று தண்டிப்பீர் - தி.பா 119:84.

      என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் கண்டறிவதற்காக காத்திருப்பேன் - அபா 2:1.

     காலம் தாழ்த்துவதாக தோன்றினால், எதிர்பார்த்து காத்திரு. அது நிறைவேறியே தீரும் - அபா 2:3.

     பயிரிடுபவர் விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கின்றார் - யாக் 5:7.

     எனக்கு விடிவு வரும்வரை என் போராட்ட நாட்களெல்லாம் பொறுத்திருப்பேன் - யோபு 14:14.

சம்பவம்
I. மீட்பு – அபிஷேகத்துக்கு காத்திருப்பு
காத்திருந்த இஸ்ரயேலர்
A. மீட்புக்காக

     எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன். ஆம் அவர்களின் துயரங்களை நான் அறிவேன் - வி.ப. 3:7.

     எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்தி செல்லவும் இறங்கி வந்துள்ளேன் - வி.ப 3:8.

     இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன் - வி.ப. 3:9.

B.அபிஷேகத்துக்காக - சீனாய் மலையருகில் - வி.ப 19:1-6

     நீங்கள் என் வார்த்தைக்கு செவிசாய்த்து,

     என் உடன்படிக்கையை கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடமையேயெனினும் நீங்களே எல்லா மக்களினங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள் - வி.ப. 19:5.

   மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசராகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை என்றார் - வி.ப. 19:6. ஆண்டவர் கூறிய படியே அனைத்தும் செய்வோம் - வி.ப 19:8.

   மூன்றாம் நாளுக்காக தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார் - வி.ப. 19:11.

   மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார். மக்களை தூய்மைப்படுத்தினார் - வி.ப. 19:14.

     சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில், ஆண்டவர் அதன் மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது – வி.ப. 19:18.

     நீர் எங்களோடு வந்தருளும், எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமை சொத்தாக்கி கொள்ளும் - வி.ப 34:9.

காத்திருந்த ஊதாரி மைந்தன்
A.காத்திருப்பு

   அறிவு தெளிந்து, என் தந்தையின் கூலியாட்களுக்கு தேவைக்கு மிகுதியான உணவு இருக்க நான் இங்கு பசியால் சாகிறேனே? - லூக் 15:17.

B.மீட்பு

   நான் பன்றி குழியை விட்டு புறப்பட்டு என் தந்தையிடம் சென்று, என்குற்றத்தை ஒத்துக் கொள்வேன் - லூக் 15:18,19.

   புறப்பட்டு தந்தையிடம் வந்தார். தந்தை பரிவு கொண்டு ஓடி சென்று கட்டி தழுவி முத்தமிட்டார் - லூக் 15:20.

C.அபிஷேகம்

   தந்தை முதல்தர ஆடை உடுத்தி, மோதிரமும், மிதியடியும் அணிவித்து விருந்து அளித்தார் - லூக் 15:22,23.

II. மீட்பருக்காக காத்திருப்பு
யோசேப்பு
A.இறையாட்சிக்காக

     அரிமத்தியா ஊரை சார்ந்த யோசேப்பு இறையாட்சியின் வருகைக்காக காத்திருந்தவர் - மாற் 15:43.

     சிமியோன் - லூக் 2:25-35

  A.காத்திருப்பு

     ஆண்டவருடைய மெசியாவை காணுமுன் அவர் சாகப்போவதில்லை என்று தூயஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார் - லூக் 2:26.

     இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர் - லூக் 2:25

B.மீட்பு

   நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன – லூக் 2:30.

   அன்னா – லூக் 2:37-38.

A.காத்திருப்பு

   கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார் - லூக் 2:37.

B.மீட்பு

   அன்னா ஆலயத்தில் வந்து கடவுளை புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார் - லூக் 2:38.

III. பாவத்திலிருந்து மீட்பு
சக்கேயு
A.காத்திருப்பு

   சக்கேயு இயேசுவை பார்க்க விரும்பி, அவரை பார்ப்பதற்காக காட்டு அத்திமரத்தில் ஏறி கொண்டான் - லூக் 19:4.

A.மீட்பு

   சக்கேயு பாவ அறிக்கை செய்தல் - லூக் 19:8.

   சக்கேயு விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் - லூக் 19:5.

   இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று – லூக் 19:9.

பாவியான பெண்
A.காத்திருப்பு

   இயேசுவுக்கு பின்னால் கால்மாட்டில் வந்து அழுது கொண்டே நின்றார். அவருடைய காலடிகளை தம் கண்ணீரால் நனைத்து தம் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமண தைலம் பூசினாள் - லூக் 7:38.

B.மீட்பு

   இயேசு அப்பெண்ணை பார்த்து, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன – லூக் 7:48.

   உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க – லூக் 7:50.

உடல் நலமற்றவர் - யோவா 5:1-9
A.காத்திருப்பு

   குளத்து நீர் கலங்குவதற்காக காத்திருப்பர் - யோவா 5:3.

   38 ஆண்டுகளாய் காத்திருந்தார் - யோவா 5:5-6.

B.மீட்பு

   எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் - யோவா 5:8.

   எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் - யோவா 5:8.

   அம்மனிதர் நலமடைந்து தம் படுக்கையை எடுத்து கொண்டு நடந்தார் - யோவா 5:9.

கூனி நிமிர்தல்
A.காத்திருப்பு

   18 ஆண்டுகளாய் கூன் விழுந்த பெண் தொழுகை கூடத்தில் இருந்தார் - லூக் 13:11.

B.மீட்பு

   அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர் - லூக் 13:12.

A.காத்திருப்பு

   எனக்கு விடிவு வரும்வரை என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன் - யோபு 14:14.

   எனக்கு விடிவு வரும்வரை என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன் - யோபு 14:14.

B.மீட்பு

   ஆண்டவர் யோபுக்கு இருந்தனவற்றையெல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார் - யோபு 42:10,12.

   ஆண்டவர் அவருக்கு வர செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரை தேற்றினார் - யோபு 42:11.

அபிஷேகத்திற்கு காத்திருப்பு
A.காத்திருப்பு

   என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேற காத்திருங்கள் - தி.தூ. 1:4.

   அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளை போற்றியவாறு இருந்தார்கள் - லூக் 24:53.

   இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிகொண்டிருந்தார்கள் - தி.தூ 1:14.

B.அபிஷேகம்

   அவர்கள் அனைவரும் தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் - தி.தூ 2:2-4.

பத்து கன்னியர் - மத் 25:1-13
A.காத்திருப்பு

   மணமகனை எதிர்கொள்ள பத்து பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள் - மத் 25:1.

   மணமகன் வர காலந்தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர் - மத் 25:5.

A.காத்திருப்பு

   மணமகனை எதிர்கொள்ள பத்து பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள் - மத் 25:1.

   மணமகன் வருகிறார் என்ற குரல் கேட்டதும் முன்மதி உடைய ஐந்து பேரும் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். மணமகன் வந்த போது ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தனர் - மத் 25:7,10.

   ஆயத்தமில்லாமல் காத்திருந்தவர்களை எனக்கு உங்களை தெரியாது என்றார் - மத் 25:12.