தெரிந்து கொள்வோமா?
 • இதன் ஆற்றல் :

  ஒரு கணக்கை, அறுநூறு கோடி பேர், நாற்பத்தி ஆறு ஆண்டுகளாக செய்து முடிப்பதை, சூப்பர் கம்ப்யூட்டர், ஒரு நாளில் செய்து முடிக்கும்.


  என்ற சூப்பர் கம்ப்யூட்டர், 1970 – ல், செய்யப்பட்டது. இந்த கம்ப்யூட்டர், 1500 ஆண்டுகளில் செய்யக்கூடிய ஒன்றை, ROAD RUNNER இரண்டே மணி நேரத்தில் செய்து முடிக்கும்.


  2008 – ம் ஆண்டு மேய் 20 –ம் நாள், இந்த சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்க இராணுவத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.


 • ஜெபம்:

  இறைவா! நான் நன்மை செய்யும் போது,தவறிழைக்காமலிருக்க அருள் தாரும்!

  நான் போர்க்களத்தில் இருக்கும் போது,என் இதயத்தில்

  அச்சம் உண்டாகாமலிருக்க அருள் தாரும்!

  என் மனத்தில் எப்போதும், தூய்மையான எண்ணங்கள் இருக்கச் செய்யும்!

  நான் பேராசைப்படாமல் இருக்கச் செய்யும்!

  என் இறுதி நாள் நெருங்கும் போது நான் போர்க்களத்தில் மடியச் செய்யும்.


  குறிப்பு:

  21-07-2008 அன்று, பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலளிக்கும் போது, பாரதப் பிரதமர், இந்த ஜெபத்தைச் சொல்லியே, தன் உரையை முடித்தார் . பஞ்சாப் ரெஜிமென்டிலுள்ள சீக்கியப்படை வீரர்கள், இந்த ஜெபத்தை தினமும் கட்டாயமாக சொல்வர்.

 • இடம் - சீனாவில் புகிங் நகரம்

  தொகை – 500 யென்

  கடனைப் பெற்றவர், தான் கடன் வாங்கவே இல்லை என்று வாதிட்டார் ஆனால் கடன் கொடுத்தவரோ, ஊர் மக்கள் முன், கடவுள் பெயரால், அவரை சத்தியம் செய்ய வற்புறுத்தினார்.


  என்ன தான் வந்துவிடப் போகிறது என்று, கடன் பெற்றவர், கடவுள் பெயரால், பொய் சத்தியம் செய்தார்.


  ஊர் கலைந்து வீடு சென்றது.


  என்ன ஆச்சரியம்! அரை மணி நேரத்திலேயே, ஒரு மழை பெய்ய, நடந்து சென்று கொண்டிருந்த, கடன் பெற்றவர் தலையில் இடி ஒன்று விழ, அவர் அங்கேயே மடிந்தார்.


  தகவல் - தினத்தந்தி – 31-08-2008 – ஞாயிறு.