என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் - யோவா 11 : 25.


இறுதிப் பயணச் சடங்கு


“இறுதிப் பயணச் சடங்கு வழிபாடு”

I. தொடக்கப்பகுதி

முகவுரை:

     ஒரு விசுவாசி இறந்தார் என்று தெரிந்ததும், அவரை சிறப்பான முறையில் ஆடை உடுத்தி, சற்று உயரமான ஒரு பெஞ்சில், அல்லது டெஸ்கில் படுக்க வைக்கவும். சுற்றிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டு, உறவினரும், சபையாரும் அமர்ந்து, இறந்த விசுவாசிக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும், ஜெபித்துக் கொண்டே இருக்கவும்.

     சூழ்நிலைக் கேற்ப, குடும்பத்தாரை தேற்றி, ஆறுதல் படுத்தவும்.

     விசுவாசத்தை உருவாக்கி, ஆறுதல்படுத்தும் இறை வார்த்தைகளை சத்தமாக வாசித்து, பொருத்தமான பாடல்களைப் பாடி, ஜெப சூழ்நிலையை உருவாக்கவும்.

     அடக்கச் சடங்கு தொடங்குவது வரை, சபையார் மாறி மாறி, இதை தொடரலாம்.

  குறிப்பு


     (ஒரு விசுவாசியின் இறப்பிலும், இறுதிச் சடங்குகளிலும், கலந்து கொண்டு, குடும்பத்தாரையும் ஏனையோரையும், விசுவாசத்தில் உறுதிப்படுத்தி, தேற்ற வேண்டியது, சபையார் அனைவருடையவும் கடமையாகும்.)

     அடக்கச் சடங்கு தொடங்குவது வரை, சபையார் மாறி மாறி, இதை தொடரலாம்.

A. சடங்குகள் ஆரம்பம்

   இறந்தவர் வீடு : அனைவரும் எழுந்து நின்று,

பாடல்:

   பிதாவுக்கு ஸ்தோத்திரம் - தேவ 
   குமாரனுக்கு ஸ்தோத்திரம் 
   ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம் 
   இன்றும் என்றுமே 
              
1. பாவ பாரத்தினின்று, என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார்
2. சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே தேவ சேனை தூதர்களை தந்து விட்டாரே
3. சீக்கிரமாய் வரப்போகும் ஆத்மநேசரே சீக்கிரமாய் காண்பேனே பொன் முகத்தையே.
திருப்பணியாளர்:
சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! எல்லாரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன் (மத் 11:28.)
   (அல்லது – சீரா 2:6.)
திருப்பணியாளர்:

ஆண்டவரிடம் பற்றுறுதி கொள். அவர் உனக்குத் 
துணை செய்வார். உன் வழிகளை சீர்ப்படுத்து. 
அவரிடம் நம்பிக்கைக் கொள். 

(அல்லது – 2கொரி 1:3, 4.)
திருப்பணியாளர்:

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை, இரக்கம் 
நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் 
ஊற்று. அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய
இன்னல்கள் அனைத்திலும், எங்களுக்கு ஆறுதல் 
அளிக்கிறார். நாங்களே, கடவுளிடமிருந்து, ஆறுதல் 
பெற்றுள்ளதால், பல்வேறு இன்னல்களில் உழலும் 
மற்ற மக்களுக்கும், ஆறுதல் அளிக்க, எங்களால் 
முடிகிறது.

பதிலுரைப்பாடல்:

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். 
(அல்லது) ஆண்டவரின் சொற்களுக்காக, ஆவலுடன் 
காத்திருக்கின்றேன் (தி.பா 130:5). 

திருப்பாடல் 130:

     1. ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான்ää உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.

     2. ஆண்டவரே, என் மன்றாட்டுக்கு செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை, உம்முடைய செவிகள், கவனத்துடன் கேட்கட்டும்.

     3. ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டால், யார் தான் நிலைத்து நிற்க முடியும்?.

     4. நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

     5. ஆண்டவருக்காக, ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

     6. விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விடää ஆம் விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விடää என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.

   7. இஸ்ராயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு, ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்புää அவரிடமே உண்டு.

   8. எல்லாத் தீவினைகளினின்றும்ää இஸ்ராயேலை மீட்பவர் அவரே!.

இறந்தவருக்காக ஜெபம்:

திருப்பணியாளர்:

     பரிசுத்த தந்தையே! எல்லாம் வல்ல நித்திய சர்வேசுவரா, உமது கட்டளைப்படி, இவ்வுலகை விட்டு உம்மிடம் வரும், உம் அடியார் ( ) அவர்களுடைய ஆன்மாவுக்காக, உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.

     ஆறுதலும் ஒளியும், அமைதியும், நிறைந்த இடத்தை, அவருக்கு அளித்தருளும். குற்றமின்றி, அவர் சாவின் வாயிலைக் கடந்து சென்று, நீர் ஆபிரகாமுக்கும், அவரது சந்ததிக்கும் வாக்களித்த புனித ஒளியிலும், புனிதரின் இல்லத்திலும், என்றும் இடம் பெறுவாராக. இவரது ஆன்மா, யாதொரு பழுதுமின்றி இருப்பதாக.

     அனைவரும் தத்தம் சம்பாவனை பெற, உயிர்த்தெழும் அப்பெரிய நாள் வரும்போது, ஆண்டவரே, இவரையும் தேர்ந்து கொள்ளப்பெற்ற உம் புனிதரோடு, உயிர்த்தெழச் செய்தருளும். இவருடைய பிழைகளையும், பாவங்களையும் மன்னித்து, இவர் அமர வாழ்வையும், நித்திய அரசையும், பெற்று மகிழ, அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:
  ஆமென்.
  
திருப்பணியாளர்:

     ஆண்டவரே! எங்கள் மீட்பரே, மானிடர் அனைவரும், மீட்படைந்து, சாவிலிருந்து வாழ்வுக்குச் சென்றடைய, நீர் உம்மையே சாவுக்குக் கையளித்தீர்.

     தாம் இழந்த உறவினருக்காகக் கண்ணீர் சொரிந்து, உம்மைத் தாழ்மையுடன் மன்றாடும் உம் அடியார் இவர்கள் அனைவர் மீதும், உமது கருணைக் கண்களைத் திருப்புமாறு, உமது இரக்க மிக்க தயவை நாடுகின்றோம். ஆண்டவரே, நீர் ஒருவரே பரிசுத்தர்.

     . நீர் ஒருவரே இரக்கம் நிறைந்தவர். நீரே உம்முடைய விசுவாசிகளுக்கு, வாழ்வின் கதவுகளை உமது சாவினால் திறந்து வைத்தீர். நீரே இவரது பாவமெல்லாம் மன்னித்தருளும். நித்திய மன்னரே, உம்மை விட்டு, எம் சகோதரர் ( ) பிரிந்தகல விடாதேயும். மாறாக, இவருக்கு ஒளியும், பேரின்பமும், அமைதியும் நிறைந்த இடத்தை, உமது மாட்சிமிக்க ஆற்றலால் தந்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:
  ஆமென்.
 

B. வாசகப்பகுதி

முதல் வாசகம் : சா.ஞா 4:7-15.

பாடல்:
   அடிமை நான் ஆண்டவரே – என்னை 
   ஆட்கொள்ளும் என் தெய்வமே 
      தெய்வமே – தெய்வமே 
      அடிமை நான் ஆட்கொள்ளும் - 2 
              
1. என் உடல் உமக்குச் சொந்தம் - 2 
இதில் எந்நாளும் வாசம் செய்யும் - 2
2. உலக இன்பமெல்லாம் நான் உதறி தள்ளிவிட்டேன்.
3. பெருமை செல்வமெல்லாம் இனி வெறுமை என்றுணர்ந்தேன்.
4. வாழ்வது நானல்ல
என்னில் இயேசுவே வாழ்கின்றீர். 
ஜெபம் :

   எம் இறைவா, எல்லாம் வல்லத் தந்தையே, உம் திருமகன், இறந்து உயிர்த்தார் என, நாங்கள் விசுவசித்து அறிக்கையிடுகின்றோம். இம்மறை பொருளினால், உம் அடியார் ( ) கிறிஸ்துவுக்குள் இறந்தது போல், கிறிஸ்து வழியாக, உயிர்த்தெழும் மகிழ்ச்சியைப் பெற, தயைகூர்ந்து, அருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:
  ஆமென்.
 

B. வாசகப்பகுதி

இரண்டாம் வாசகம்: 2கொரி 5:1-10.

பாடல்:
   அஆறுதலின் தெய்வமே 
   உம்முடைய திருச்சமூகம் 
   எவ்வளவு இன்பமானது – ஆறுதலின் தெய்வமே
1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் 
உண்மையிலே பாக்கியவான்கள். 
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்.
2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்
3. கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் - ஆமென்
4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில் ஒருநாள் மேலானது 
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் 
வாசலில் காத்திருப்பேன் -- ஆமென். 
ஜெபம் :

   இறைவா, விசுவாசிகளின் மகிமை நீர். புனிதரின் வாழ்வும் நீரே. உம் திருமகனின் இறப்பினாலும், உயிர்ப்பினாலும், நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். நாங்களும் உயிர்த்தெழுவோம் என்ற மறையுண்மையை, அறிந்து ஏற்றுக் கொண்ட உம் அடியார்,( ) மீது இரங்கி, வரவிருக்கும் பேரின்ப மகிழ்ச்சியை, இவர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:
  ஆமென்.
 

B. வாசகப்பகுதி

நற்செய்தி வாசகம் - லூக் 7:11-16.
(வாசகப்பகுதி முடிந்ததும், பொருத்தமான ஒரு சிறிய மறை உரை நிகழ்த்தலாம்.)
பாடல்:
   உமக்காகத் தானே ஐயா - நான் 
   உயிர் வார்ழ்கிறேன் ஐயா 
   இந்த உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்
   உமக்காகத்தானே ஐயா.
1. கோதுமை மணி போல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்.
2. எனது ஜீவனை மதிக்கவில்லை ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை எல்லாருக்கும் நான் எல்லாமானேன். அனைவருக்கும் நான் அடிமையானேன்.
3. எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பதில்லை மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன். மனநிறைவோடு பணி செய்வேன்.

4. பண்படுத்தும் உம் சித்தம் போல்
பயன்படுத்தும் உம் விருப்பம் போல்
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்; 
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே
5. எனது பேச்செல்லாம் உமக்காக எனது செயலெல்லாம் உமக்காக எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக.

(தொடர்ந்து)
திருப்பணியாளர்:
  ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 
 
அனைவரும்
  உம்மோடும் இருப்பாராக. 
 

ஜெபிப்போமாக :

  இரக்கம் மிகுந்த தந்தையே! ஆறுதல் அளிக்கும்
  இறைவா! நீர் எம்மீது, முடிவில்லா அன்பு கூர்ந்து,
  சாவின் நிழலையே, வாழ்வின் வைகறையாக 
  மாற்றுகின்றீர். இன்னலில் உழன்று, ஏங்கும் உம் 
  அடியார், (   ) அவர்களை, கண்ணோக்கியருள
  உம்மை மன்றாடுகின்றோம். ஆண்டவரே, எங்கள் 
  அடைக்கலமும், ஆற்றலும் நீரே! இருளும், 
  துயரும் நிறைந்த எங்கள் அழுகையை மாற்றி,
  நாங்கள் ஒளியும்,அமைதியும், பெறும் வண்ணம்,
  எங்களோடு இருந்தருள்வீராக. 
 
  எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன், எங்கள்
  மரணத்தை, தம் மரணத்தால் அழித்து, தம் 
  உயிர்ப்பினால், மீண்டும் எங்களுக்கு வாழ்வு 
  அளித்தார். ஆதலால், எங்கள் கண்ணீரெல்லாம் 
  துடைக்கப்பெற்று, நாங்கள் இவ்வுலக வாழ்வின் 
  இறுதியில், எங்கள் உறவினரோடு, வானகம் 
  வந்து சேர்வதற்கு, ஏற்றவாறு, கிறிஸ்துவை 
  நோக்கி சென்று கொண்டிருக்கச் செய்தருளும். 
  எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, 
  உம்மை மன்றாடுகின்றோம். 
 

(தீர்த்தம் தெளித்தல்).
அனைவரும் :
  ஆமென். 
 
II. இறுதிப்பயணப் பவனி

(பவனியின் போது, திருப்பணியாளரும், பாடகர் குழுவினரும் முன்னால் செல்லவும். விசுவாசிகள், முன்னும் பின்னுமாக சூழ்ந்து வர, பவனியின் பாடல்களை, அனைவரும் சேர்ந்து, உருக்கமாக பாடவும். பவனி முழுவதும், விசுவாச உணர்வோடும், பக்தியோடும் கலந்து கொள்ளவும்).
பாடல்: (மலையாளம்)

  சமயமாம் ரதத்தில் ஞான்
  சொர்க்க யாத்ற செய்யுந்நு
  என் ஸொதே~ம் காண்மதினாய் 
  ஞான் தனியே போகுந்நு
 
1. ராத்றியில் ஞான் தெய்வத்தின்றே 
மடியில் உறங்ஙந்நு 
அப்போழும் என் ரதத்தின்றே 
சக்றம் முன்னோட்டோடுந்நு
 

2. ராவிலே ஞான் தெய்வத்தின்றே 
கைகளில் உணருந்நு 
அப்போழும் என் ரதத்தின்றே 
சக்றம் முன்னோட்டோடுந்நு
 
3. ஆஹெ அல்ப நேரம் மாத்றம்
என்றெ யாத்;ற தீருவான் 
ஆஹெ அல்ப நாழிக மாத்றம் 
ஈயுடுப்பு மாற்றுவான் 
 
4. இப்பிரபஞ்ச ஸ_ஹம் நேடான் 
இப்பொழல்ல ஸமயம் 
என் ஸொதேத்து செல்லேணம் ஞான் 
யெவினே காணுவான் 
 

பாடல்: (தமிழ்)

  காலமாம் என் ரதத்தில் நான் 
  சொர்க்க யாத்ரை போகிறேன்
  சொந்த நாட்டை காண்பதற்காய் 
  நான் தனியே போகிறேன். 
 
1. இரவில் நான் இறைவனின் 
மடியில் உறங்குவேன்
அப்போதும் என் ரதத்துடைய 
சக்கரம் முன் ஓடுதே 
 
2. காலையில் நான் இறைவனின் 
கைகளில் கண் விழிப்பேன் 
அப்போதும் என் ரதத்துடைய 
சக்கரம் முன் ஓடுதே 
 
3. ஆக கொஞ்சம் நேரம் மட்டும் 
எந்தன் யாத்திரை தீரவே
ஆக கொஞ்சம் நாழிகையே 
இந்த ஆடை மாற்றவே 
 
4. இப்பிரபஞ்சம் சுகம் தேட 
இப்போதல்ல சமயம் 
சொந்த நாட்டில் போக வேண்டும்
இயேசுவைக் காண்பதற்கு 
 
1. கல்லறைத் தோட்டத்தில்:

இறுதிப்பரிந்துரையும் - பிரியாவிடையும்:

திருப்பணியாளர்:

விசுவாசிகளின் வழக்கப்படி, இறந்தோரை நல்லடக்கம் 
செய்யும் கடமையை, நிறைவேற்ற கூடியிருக்கும் 
நாம்,இறைவனை பக்தியுடன் மன்றாடுவோம். 
அனைத்தும்,அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன. 
நம் சகோதரியின் உடலை, நலிவுற்ற நிலையில், 
நாம் அடக்கம் செய்தாலும், புனிதரின் வரிசையில், 
இதை வல்லமையுள்ளதாக, உயிர்த்தெழச் செய்வாராக. 
இவரது ஆன்மா, புனிதரின் கூட்டத்தில் இடம் பெறக் 
கட்டளையிடுவாராக. தீர்ப்பிடும் போது, இறைவன் 
இவருக்கு இரக்கம் காட்டுவதால், சாவே இவருக்கு 
மீட்பு அளிப்பதாகி, பாவக்கடன் ஒழிவதாக. பிதாவிடம் 
இவர் அன்புறவு கொள்ள, நல்லாயன் இவரை அழைத்துச் 
செல்வாராக. இவர் நித்திய மன்னரின் பரிவாரத்தில், 
முடிவற்ற இனபமும், புனிதரின் தோழமையும் பெற்று 
மகிழ்வாராக. 
 
பிரியாவிடை பதிலுரைப்பாடல்:

திருப்பணியாளர் : -
  இறைவனின் புனிதரே! துணை நிற்க வருவீர். 
  தேவனின் தூதரே! எதிர்கொண்டு வருவீர். 
 
அனைவரும் : -
  இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு,
  உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள். 
 
திருப்பணியாளர் : -
  உம்மைத் தம்மிடம் அழைத்;த கிறிஸ்து, 
  உம்மை ஏற்றுக் கொள்வாராக. தூதரும் 
  உம்மை, ஆபிரகாமின் மடியில் கொண்டு 
  சேர்ப்பாராக.
 
அனைவரும் : -
  இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு, 
  உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள். 
 
திருப்பணியாளர் : -
  நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே!
  இவருக்கு இன்று அளித்திடுவீரே. 
  முடிவில்லா ஒளி இவர் மேல் ஒளிர்வதாக. 
 
அனைவரும் : -
  இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு 
  உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள். 
 
(பின் திருப்பணியாளர், கீழ்க்கண்ட ஜெபத்தை சொல்கிறார்;.)
ஜெபம் :

     கிறிஸ்துவுக்குள் இறந்த அனைவரோடும், இவரும் இறுதி நாளில் உயிர்த்தெழுவார் என்னும் உறுதியான நம்பிக்கையுடன், இரக்கம் மிகுந்த தந்தையே! உம்முடைய கைகளில், எம் சகோதரர் P.சந்தன ராஜன் இவர்களின் ஆன்மாவை ஒப்படைக்கிறோம்.

     ஆண்டவரே! எங்கள் மன்றாட்டுக்கு, தயவாய் செவிசாய்த்து, உம் அடியாருக்கு பேரின்ப வீட்டின், கதவுகளைத் திறந்தருளும். மேலும், இங்கிருக்கும் நாங்கள் அனைவரும், கிறிஸ்துவை சந்தித்து, உம்மோடும், எம் சகோதரியோடும், எந்நாளும் ஒன்று சேர்ந்திருக்குமட்டும், விசுவாசம் நிறைந்த சொற்களால், ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும் : -
  ஆமென். 
 
திருப்பணியாளர்:
பல்லவி :

   வானதூதர் பேரின்ப வீட்டிற்கு, உம்மைக் கூட்டிச் சென்று, சேர்த்திடுவார்களாக. வேதசாட்சிகள் வரவேற்று, திருநகராம் எருசலேமுள், உம்மைச் சேர்ப்பார்களாக.

இரங்கல் பகுதி

(இப்பொழுது, இறந்த விசுவாசியைப் பற்றிய, விசுவாச சாட்சியத்தை, 1. சபையிலிருந்து சிலர், 2. குடும்பத்திலிருந்து சிலர், சுருக்கமாக கூட்டத்தாருக்கு கூறுவர். கூட்டத்தார், வசதிக்கேற்ப, அமர்ந்தோ, நின்று கொண்டோ இருக்கலாம்).

முடிவில் ஒரு பொருத்தமான பாடல்
III. இறுதிப்பகுதி
1. கல்லறையில் ஜெபம் :
ஜெபிப்போமாக:
திருப்பணியாளர்:

   ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில், மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது விசுவாசம் கொண்ட, அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சித்திருக்கின்றீர். எனவே, உடல் அடக்கத்துக்கு பயன்படும் இக்கல்லறைகள், உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து, இவருக்கு பேரொளி தரும் அந்த நாள் மட்டும், இவர் கல்லறையில், அமைதியுடன் துயில் கொண்டு, இளைப்பாற செய்தருள்வீராக. உயிர்ப்பும், உயிரும் நீரே ஆதலால், இவர் உயிர்த்தெழுந்த பின், உம் திருமுக ஒளியில், விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும் : -
  ஆமென். 
 
திருப்பணியாளர்:

   நம் சகோதரர் ( ) அவர்களை, இவ்வுலக வாழ்வினின்று, தம்மிடம் அழைத்துக் கொள்ள, எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே, திரும்பிச் செல்லும்படி, இவர் உடலை, நிலத்திற்கு கையளிக்கிறோம். ஆயினும், இறந்தோரிடமிருந்து, தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார். ஆதலால் நம் சகோதரியை, ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரை, தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக. இவரது உடலையும், இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வாராக.

   நாம் பிரிந்து செல்லும் முன், நம் சகோதரருக்கு ஒன்று சேர்ந்து, மரியாதை செய்வோமாக. நாம் இறுதியாக அளிக்கும் இப்பிரியாவிடை, நம் அன்பை எடுத்துக் காட்டி, துயரைக் குறைத்து, நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக. ஏனெனில், அனைத்தையும் வென்ற கிறிஸ்து, தம் அன்பினால், சாவையும் வென்றார். எனவே, வானகத்தில் ஒருநாள், நாம் நம் சகோதரரை, அன்புறவில் மீண்டும் கண்டு மகிழ்வோம்.

   நம் சகோதரர் ( ) அவர்களுக்காக, நம்பிக்கையுடன் வேண்டுதல் புரிந்த பின், இப்பொழுது, இறுதியாக பிரியாவிடை கூறுவோம். இவரது பிரிவால், நாம் துயருற்றாலும், இப்பிரியாவிடையால், நம்பிக்கையும், ஆறுதலும் பெறுகின்றோம். ஏனெனில், நாம் மீண்டும் நம் சகோதரரைக் கண்டு, அவரது நட்பிலே மகிழ்வோம். துயரம் மிகுந்தவர்களாக, இப்பொழுது பிரிந்து செல்லும் நாம் அனைவரும், இறைவன் இரக்கத்தால், அவரது அரசில் மீண்டும் ஒருநாள், மகிழ்வுடன் கூடுவோம். எனவே, கிறிஸ்துவின் விசுவாசத்தில், நாம் ஒருவருக் கொருவர், ஆறுதல் கூறுவோமாக.

2. விசுவாசிகளின் மன்றாட்டு:
திருப்பணியாளர்:

   “உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே. என்னிடம் விசுவாசம் கொள்பவர், இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது, என்னிடம் விசுவாசம் கொள்ளும் எவரும், என்றுமே சாகமாட்டார்” என்றுரைத்த, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம், நம் சகோதரிக்காய மன்றாடுவோம்.

திருப்பணியாளர்:

   இறந்து போன லாசருக்காக, கண்ணீர் சிந்தினீரே. எங்கள் கண்ணீரையும் துடைக்க, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:

   ஆண்டவரே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருப்பணியாளர்:

   இறந்தோர் உயிர் பெற்றெழச் செய்தீரே. எங்கள் சகோதரருக்கு, நித்திய வாழ்வளிக்க உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:

   ஆண்டவரே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருப்பணியாளர்:

   மனம் திரும்பிய கள்ளனுக்கு, நீர் வானகம் தருவதாய் உறுதியளித்தீரே. எங்கள் சகோதரரையையும், வானகம் சேர்த்தருள, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:

   ஆண்டவரே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருப்பணியாளர்:

   எங்கள் சகோதரரை, ஞானஸ்நான நீரினால் கழுவி, திருப்பூசுதலால் முத்திரையிட்டீரே, இவரை வானகம் சேர்த்தருள, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:

   ஆண்டவரே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருப்பணியாளர்:

   எம் சகோதரருக்கு, உடலையும் இரத்தத்தையும், திருவிருந்தாக அளித்தீரே! வானரசின் விருந்திலும் , இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும்:

   ஆண்டவரே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருப்பணியாளர்:

   எம் சகோதரரின் பிரிவாற்றாமையால், துயருறும் நாங்கள், விசுவாசத்தினாலும், நித்திய வாழ்வின் நம்பிக்கையினாலும், ஆறுதல் பெற, உம்மை மன்றாடுகின்றோம்.

   ஆண்டவரே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கர்த்தர் கற்ப்பித்த ஜெபம்:
(பின்னர் கர்த்தர் கற்ப்பித்த ஜெபத்தை, அனைவரும் சேர்ந்து சொல்வார்கள்).
திருப்பணியாளர் :

   : இறைவா! முறையான வேண்டுதலை, நீர் கேட்டருளுகின்றீர். பக்தி நிறைந்த நேர்ச்சைகள் மீது, கருணைக் கண் திருப்புகின்றீர். இன்று, உம் அடியார் ( ), அவருடைய, அடக்கச் சடங்கை, பரிவுடன் நிறைவேற்றுகின்றோம். உம் புனிதர் அனைவருடனும், இவருக்கு விண்ணகக் கொடையில், பங்கு அளித்தருள, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரும் : - ஆமென்.
திருப்பணியாளர் :

   ஆண்டவரே! உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார், தம் செயல்களுக்கு தண்டனைப் பெறாதபடி, இரக்கம் காட்டியருளும். இவரது மெய்யான விசுவாசம், இவ்வுலகில் இவருக்கு, விசுவாசிகளின் கூட்டத்தில், இடமளித்தது போல், உமது இரக்கம் இவரை, மறு உலகில், வானதூதரின் கூட்டத்திலும், சேர்க்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரும் : - ஆமென்.
திருப்பணியாளர் :

   ஆண்டவரே! நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.

அனைவரும் : - முடிவில்லாத ஒளி, இவர் மீது ஒளிர்வதாக.
(கல்லறையில், அடக்கம் நடைபெறும் போது, பாடகற்குழுவினர், “வழியனுப்பும் - பாடல்களை” பாடிக்கொண்டேயிருப்பர்).
பாடல்: 1
        காலமோ செல்லுதே
        வாலிபம் மறையுதே
        எண்ணமெல்லாம் வீணாகும் 
        கல்வி எல்லாம் மண்ணாகும் 
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
கருணையின் அழைப்பிலே மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட - மகிமையில்…..
துன்பமெல்லாம் மறைந்து போம் இன்னலெல்லாம் மாறிப்போம் வியாதியெல்லாம் நீங்கிப்போம் நாயகன் எம் இயேசுவால்-மகிமையில்..
பாடல்: 2
1. துக்கத்தின்றே பான பாத்றம் 
கர்த்தாவென்றெ கையில் தந்நால் 
ஸந்தோத்தோடது வாங்ஙி
ஹாலேலூயா பாடிடும் ஞான்
2. தோ~மாயிட்டொந்நும் என்னோ டென்றே தாதன் செய்ஹயில்லா என்னேயவன் அடிச்சாலும் அவனென்னெ ஸ்னேஹிக்குந்நு
3. கஷ்ட நஷ்டமேறி வந்நால் பாக்யவானாய் தீருந்நு ஞான் கஷ்டமேற்ற கர்த்தாவோடே கூட்டாளியாய் தீருந்நு ஞான்
4. லோக ஸெளக்யமெந்நு தரும் ஆத்ம க்ளெஸம் அதின் பலம் ஸெளபாக்யமுள்ளாத்ம ஜீவன் க~;டதயில் வர்த்திக்குந்நு
5. ஜீவனத்தின் வம்பு வெண்டா 
காழ்ச்சயுடெ ஸொப வெண்டா 
கூடாரத்தின் மூடி போல
க்றூ~pன் நிழல் மாத்றம் மதி 
6. உள்ளிலெனிக் கெந்து ஸ_கம் தேஜஸேறும் ஸெறாபுகள் கூடாரத்தினகத்துண்டு n~க்கய்னாயும் உண்டவிடே
7. பக்தன் மாராம் ஸஹோதரர் விளக்கு போல் கூடயொண்டு ப்றாரத்தனயின் தூபடிமாண்டு மே~ மேலென்றப்ப மொண்டு
8. ப்ராகரத்திலென்றே மும்பில் ஏ~{வினெ காணுந்நு ஞான் யாஹபீடம் அவனத்றே ஏ~{ என்றே ரக்~ யவன்.
பாடல்: 3
துக்கத்தின் கசந்த காடி 
கர்த்தர் எந்தன் கையில் தந்தால் 
சந்தோ~மாய் அதை வாங்கி
அல்லேலூயா பாடுவேன் நான் 
தீமையாக எனக்கொன்றும் எந்தன் நேசர் செய்யமாட்டார் என்னை அவர் அடித்தாலும் அவர் என்னை அணைப்பாரே
க~;டம் ந~;டம் வரும் போது பாக்கியவானாய் ஆவேனே நான் க~;டம் ஏற்ற கர்த்தரோடு நண்பனாக மாறுவேன் நான்
மண்ணின் இன்பம் என்ன தரும் விண்ணின் இன்பம் மேலானதே தூய்மையுள்ள ஆத்துமாவோ துன்பத்தில் வளர்ந்திடுமே
லோகம் தரும் ஆசீர் வேண்டாம் கண் மயக்கும் காட்சி வேண்டாம் கூடாரத்தின் மூடி போல சிலுவை நிழலே போதும்
      ஆத்மாவுக்குள் சுகம் உண்டு 
	    தூதர்களின் உறவுண்டு 
	    இடைவிடா துதிவுண்டு 
	    தேவனின் பிரசன்னமுண்டு 
விசுவாச சகோதரர் விளக்கு போல் உடனுண்டு ஜெபங்களின் தூபமுண்டு மேசையில் என் அப்பமுண்டு
இம்மையில் என் முன்னும் பின்னும் இயேசுவை நான் காணுகின்றேன். விண்ணின் யாக பீடத்தில் ஏறுவேன் நான் மீட்படைவேன்
பாடல்: 4
ராஜாதி ராஜன் மஹிமயோடே 
வானமேகத்தில் எழுந்நள்ளாறாய் 
க்ளெ~ம் தீர்ந்நு ஞான் நித்யம் வஸிப்பான் வாஸமொருக்கான் போய ப்ரியன் தான்
1. நிந்ந க~;டத பரிஹா~ங்ஙள் து~pகள் எல்லாம் தீரான் காலமாய்
2. ப்றாண ப்றியன்றே பொன்னு முகத்தே தேஜஸோடே நாம் காண்மான் காலமாய்
3. காந்ததனுமாயி வாஸம் செய்யுவான் காலம் ஸமீப மாயி ப்றியரே
4. யுஹா யுஹாமாய் ப்றியன் கூடே நாம் வாழும் ஸ{தின்னம் ஆஸன்னமாய்
5. காகள தொனி கேட்கும் மாத்றயில் மறுரூபமாய் பறந்நீடாறாய்
பாடல்: 5
இராஜாதி ராஜன் மகிமையோடு 
வானமேகத்தில் வரும் நேரம் வந்ததே 
துன்பம் தீர்ந்து நான் நித்யம் ஜீவிக்க இல்லம் எனக்காய் அமைக்க சென்றார்
1. நிந்தை க~;டங்கள் பரிகாசங்கள் பழிகள் தீரும் நேரம் வந்ததே
2. ஜீவ நேசரின் பொன் முகத்தினை மேன்மையாய் காணும் நேரம் வந்ததே
3. மணவாளனோடொன்றி வாழ்ந்திட நேரம் வந்ததே அன்பே நேசரே
4. காலகாலமாய் நேசரோடே நான் வாழ்ந்து மகிழும் நேரம் வந்ததே
5. எக்காள தொனி கேட்கும் வேளையில் ரூபம் மாறிடும் நேரம் வந்ததே