திருமுழுக்கு ஒரு “உடன்படிக்கைச் சடங்கு”

Rev.Fr.R.John Joseph


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


1. பழைய உடன்படிக்கை:

 1. தன் இரக்கத்தை, மனிதரோடு காட்ட விரும்பிய கடவுள், மனிதனோடு “உடன்படிக்கை” செய்துகொண்டார் - எரே 31:33,34.

 2. “அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ராயேல் வீட்டாரோடு, நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை, அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன். அதை, அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்” – எரே 31:33.

  “இனிமேல் எவரும், ‘ஆண்டவரை அறிந்து கொள்ளும்’ என, தமக்கு அடுத்திருப்பவ ருக்கோ, சகோதரருக்கோ, கற்றுத் தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல், சிறியோர் வரை, அனைவரும், என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை, நான் மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை, இனிமேல் நினைவுகூர மாட்டேன்” – எரே 31:34.

 3. இவ்வாறு, கடவுள் இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட, ஒவ்வொரு உடன்படிக்கையிலும், கட்டளை, வாக்குத்தத்தம், சடங்கு, என மூன்று அம்சங்கள் இருந்தன.

 4. கட்டளை – தொ.நூ 17:9, 26:5

 5. “கடவுள் ஆபிகாமிடம், ‘நீயும், தலைமுறை தோறும், உனக்குப் பின்வரும், உன் வழி மரபினரும், என் உடன்படிக்கையை, கடைபிடிக்க வேண்டும்’ – தொ.நூ 17:9.

  “ஏனெனில், ஆபிரகாம், என் குரலுக்குச் செவிசாய்த்து, என் நியமங்களையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கடைபிடித்தான்” – தொ.நூ 26:5.

 6. வாக்குத்தத்தம் - தொ.நூ 17:7.

 7. “தலைமுறை தலைமுறையாக, உன்னுடனும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை, நான் நிலைநாட்டுவேன். இதனால், உனக்கும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருக்கும், நான் கடவுளாக இருப்பேன்” – தொ.நூ 17:7.

 8. சடங்கு – தொ.நூ 17:10,11.

 9. “நீங்கள் கடைபிடிக்குமாறு, உன்னோடும், உனக்குப் பின் வரும், உன் வழிமரபினரோடும், நான் செய்துகொள்ளும், உடன்படிக்கை இதுவே. உங்களுள் ஒவ்வொரு ஆணும், விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் உடலில், விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். இதுவே, உங்களுக்கும் எனக்கும் இடையேயுள்ள, உடன்படிக்கையின் அடையாளம்” – தொ.நூ 17:10

 10. இங்கே, “உடன்படிக்கையின் கட்டளை” என்பது, மனிதன் கடைபிடிக்க வேண்டிய, கடவுளின் கட்டளைகள்.

 11. “உடன்படிக்கையின் வாக்குத்தத்தம்” என்பது, கடவுள் கொடுப்பதாக வாக்களிக்கும் ஆசீர்வாதங்கள்.

 12. கடவுளோடு உடன்படிக்கை செய்பவர், கடவுளுடைய கட்டளைகளை கடைபிடித்து, அவர் வாக்களித்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 13. “உடன்படிக்கைச் சடங்கு” என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருப்பினும், பொதுவாக இஸ்ராயேல் மக்களுக்கு, ஆபிரகாம் வழியாக அளித்த, உடன்படிக்கைச் சடங்கானது “விருத்தசேதனமாக” இருந்தது – தொ.நூ 17:11.

 14. “உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். இதுவே, உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள, உடன்படிக்கையின் அடையாளம்” – தொ.நூ 17:11.

 15. இவ்வாறு, “உடன்படிக்கையின் வார்த்தைகள்” உடன்படிக்கைச் சடங்கால், “உறுதிப்படுத்தப்பட்டன” – தொ.நூ 17:11.

 16. இங்கே, உடன்படிக்கைச் சடங்கு எனும் “விருத்தசேதனமானது” இஸ்ராயேல் மக்களின் உடலில் செய்யப்பட்ட, “ஊனைக்களையும்” சடங்கு ஆகும் - தொ.நூ 17:13,14.

 17. “உன் வீட்டில் பிறந்த குழந்தைக்கும், விலைக்கு வாங்கியதற்கும், கண்டிப்பாக, விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு, என் உடன்படிக்கை, உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும். தன் உடலில், விருத்தசேதனம் செய்யப் படாத, எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து, விலக்கப்படுவான்” என்றார் - தொ.நூ 17:13,14.

2. புதிய உடன்படிக்கை:

 1. புதிய ஏற்பாட்டில், “உடன்படிக்கையின் இணைப்பாளர்” இயேசு கிறிஸ்து – எபி 9:15.

 2. “இவ்வாறு, இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார்” – எபி 9:15.

 3. இங்கே, “உடன்படிக்கை கட்டளை” – “விசுவாசம்” – தி.ப 16:31, யோவா 3:15,16.

 4. “அதற்கு, பவுல் சிறைக்காவலனிடம், ‘ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ளும். அப்பொழுது, நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார் - தி.ப 16:31.

  “அப்பொழுது, அவரிடம் விசுவாசம் கொள்ளும் அனைவரும், நிலைவாழ்வு பெறுவர்” – யோவா 3:15.

  தம் ஒரே மகன் மீது, விசுவாசம் கொள்ளும் எவரும், அழியாமல், நிலை வாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே, அளிக்கும் அளவுக்கு, கடவுள் உலகின் மேல், அன்பு கூர்ந்தார்” – யோவா 3:16.

 5. மேலும், “உடன்படிக்கை வாக்குத்தத்தம்” – “மீட்பு”, “நிலைவாழ்வு”, போன்றவை.

 6. புதிய “உடன்படிக்கையின் சடங்காக” நாம் காண்பது, “திருமுழுக்குச் சடங்கு” – 1பேது 3:21.

 7. “அந்த தண்ணீரானது, திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு, உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல. அது, குற்றமற்ற மனச்சான்றுடன், கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும் (உடன்படிக்கை)” – 1பேது 3:21."புதிய உடன்படிக்கையின் மூன்று அம்சங்கள்"


I. புதிய உடன்படிக்கையின் கட்டளை – “விசுவாசம்”:


1. இறைவார்த்தையை ஏற்று:

 1. இறை வார்த்தையை ஏற்றுக்கொண்டு விசுவசிப்பது – 1தெச 2:13, உரோ 10:8.

 2. இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து விசுவசிப்பது – உரோ 1:5, 3:22,25,26,28,30, 4:5, தி.ப 6:7.

 3. கட்டளையை கடைபிடித்து விசுவசிப்பது - 1யோவா 3:23, வெளி 14:22.

2. பாவ அறிக்கை செய்து:

 1. ஆண்டவரிடம் மனம் திரும்பி விசுவசிப்பது - தி.ப 11:21.

 2. தம் பாவங்களை அறிக்கையிட்டு விசுவசிப்பது - தி.ப 19:18.

 3. தங்களை தூயோராக்கி விசுவசிப்பது - தி.ப 26:18.

 4. மனம் மாறுதல், வாழ்க்கை மாறுதல், ஆகிய செயல்களால விசுவசிப்பது – யாக் 2:14,18.

3. சபையோடு சேர்ந்து:

 1. சபையோடு சேர்ந்து விசுவசிப்பது - தி.ப 5:14.

 2. 1. ஒரே உள்ளமும், ஒரே உயிருமாயிருந்து - 2. உடமைகளை பொதுப் பொருளாய் வைத்து விசுவசிப்பது - தி.ப 4:32.

 3. ஒன்றாயிருந்து, உடமைகளை பொதுப்பொருளாய் வைத்து விசுவசிப்பது - தி.ப 2:44.

 4. நட்புறவு கொண்டு விசுவசிப்பது – பிலமோ 1:6.

 5. நற்செயல்கள் செய்து விசுவசிப்பது - தீத் 3:8.

 6. நல்லவர் என்று நடத்தையில் காட்டி விசுவசிப்பது - தீத் 2:10.

 7. அனேகரை ஆண்டவரிடம் கொண்டு வந்து விசுவசிப்பது – தி.ப 11:24.
II. புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம்:


1. ஆசீர் கிடைக்கும்:

 1. விசுவசித்தால் - வெட்கத்திற்குள்ளாக மாட்டார் - உரோ 9:33, 10:11.

 2. விசுவசித்தால் - நலம் கிடைக்கும் - தி.ப 14:9.

 3. விசுவசித்தால் - விடுதலை கிடைக்கும் – தி.ப 13:39.

 4. விசுவசித்தால் - வாக்களிக்கப்பட்டவை கிடைக்கும் - கலா 3:22.

2. மீட்பு கிடைக்கும்:

 1. விசுவசித்தால் - அருள்நிலை அடையலாம் – உரோ 5:2.

 2. விசுவசித்தால் - பாவமன்னிப்பு கிடைக்கும் – தி.ப 10:43.

 3. விசுவசித்தால் - உள்ளம் தூய்மையடையும் - தி.ப 15:9.

 4. விசுவசித்தால் - கிறிஸ்து உள்ளங்களில் குடிகொள்வார் - எபே 3:17.

 5. விசுவசித்தால் - இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவர் - உரோ 1:17, 3:22,25,26,28,30, 4:5,11,13,24, 5:1, 9:30, 10:4,6, கலா 2:16, 3:24, 5:5, பிலி 3:9.

 6. விசுவிசித்தால் - கடவுளுக்கு உகந்தவர் ஆவோம் - எபி 11:6.

 7. விசுவாசித்தால் - மீட்பு கிடைக்கும் – தி.ப 16:31, 1கொரி 1:21, 15:2, எபே 2:8, 1திமொ 4:10, 2திமொ 3:15.

3. அபிஷேகம் கிடைக்கும்:

 1. விசுவசித்தால் - தூய ஆவி வருவார் – கலா 3:2, 5,14.

 2. விசுவசித்தால் - மீட்பும் அபிஷேகமும் கிடைக்கும் - எபே 1:12, தி.ப 10:45, 11:17.

 3. விசுவசித்தால் - மகிழ்ச்சி, அமைதி, ஆவியின் வல்லமை கிடைக்கும் – உரோ 15:13.

 4. விசுவசித்தால் - கடவுளின் மக்கள் ஆவோம் - கலா 3:26.

 5. விசுவசித்தால் - கடவுளை உறுதியாக அணுகும் உரிமையும் துணிவும் கிடைக்கும் - எபே 3:12.

 6. விசுவசித்தால் - வாழ்வு கிடைக்கும் – உரோ 1:17, எபி 10:33.

 7. விசுவசித்தால் - நிலைவாழ்வு கிடைக்கும் – தி.ப 13:48, தீத் 1:2, 1யோவா 5:13.III. புதிய உடன்படிக்கையின் “சடங்கு” திருமுழுக்கு:


1. “இதயத்தில் விருத்தசேதனம்”:

 1. கடவுள் இஸ்ராயேல் மக்களிடம், “விருத்தசேதன சடங்கிற்கு” வலியுறுத்தினாலும், - தொ.நூ 17:11,

 2. “உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். இதுவே, உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள, உடன்படிக்கையின் அடையாளம்” – தொ.நூ 17:11.

  • அதன் உட்பொருளை , மக்கள் உணராமல், நடந்தபோது, அன்போடு கடவுள் அதை, நினைவூட்டினார் - எரே 4:4, எசே 44:7,9.

  “யூதாவின் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே! ஆண்டவருக்காக, விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள். உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றி விடுங்கள். இல்லையேல், உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு, என் சீற்றம், நெருப்பென வெளிப்பட்டு, பற்றி எரியும்” – எரே 4:4.

  “நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும் இரத்தமும், கொண்டு வரும்போதே, உடலிலும், உள்ளத்திலும், விருத்தசேதனம் செய்யாத அன்னியரை என் தூயகத்திற்கு, கூட்டி வந்து, என் இல்லத்தை, தீட்டுப்படுத்தினீர்கள். உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும், என் உடன்படிக்கையை முறித்தீர்கள்” – எசே 44:7.

  “உடலிலும், உள்ளத்திலும், விருத்தசேதனம் செய்யாத, எந்த அன்னியரும், இஸ்ராயேலரிடையே வாழும் அன்னியரும் கூட, என் தூயகத்தில், நுழையக் கூடாது” – எசே 44:9.

 3. விருத்தசேதனச் சடங்கு, கடவுளும் இஸ்ராயேல் மக்களும் செய்து கொண்ட, உடன்படிக்கையின் “அடையாளமே” – தொ.நூ 17:11.

 4. கடவுளோடு செய்துகொண்ட “உன்படிக்கையின் வார்த்தைகளை” மறந்துவிட்டு, “அடையாளத்துக்கு” மட்டும் முக்கியத்துவம் கொடுத்த, இஸ்ராயேல் மக்களைக் கடவுள் கண்டித்தார் - எரே 9:25,26.

 5. “அப்போது, நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன். எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு, ஆகிய நாடுகளையும், தண்டிப்பேன். ஏனெனில், வேற்றினத்தார் யாவரும், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள். இஸ்ராயேல் வீட்டார் யாவரும், இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்” – எரே 9:25,26.

 6. இந்தப் பின்னணியில், கடவுள் “இதயத்தில் விருத்தசேதனம்” செய்யுங்கள் என்றார் - எரே 4:4.

 7. “இதயத்தின் நுனித்தோலை அகற்றுங்கள்” என்ற கட்டளை, இதயத்தில் உறைந்திருக்கும் “தீமையை” அகற்றுங்கள் என்பதாக அமையும் - எரே 17:1.

 8. “யூதாவின் பாவம், இரும்பு எழுத்தாணியாலும், வைர நுனியாலும், எழுதப்பட்டுள்ளது. அது, அவர்கள் இதயப் பலகையிலும், பலிபீடக் கொம்புகளிலும், பொறிக்கப்பட்டுள்ளது” – எரே 17:1.

 9. உடலில் விருத்தசேதனம் செய்யக்கூறிய கடவுள் - தொ.நூ 17:11, பிற்காலங்களில், “இதயத்தில் விருத்தசேதனம்” செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார் - எரே 4:4, 9:25,26, இ.ச 10:16, 30:6.

 10. “ஆகவே, உங்கள் உள்ளத்தை, விருத்தசேதனம் செய்யுங்கள். வணங்கா கழுத்தினராய் இராதீர்கள்” - இ.ச 10:16.

  “உன் கடவுளாகிய ஆண்டவர், உன் உள்ளத்தையும், உன் வழிமரபின் உள்ளத்தையும், பண்படுத்துவார். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் மீது, நீ முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், அன்புகூர்வாய். அப்போது நீயும் வாழ்வு பெறுவாய் - இ.ச 30:6.

 11. உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே, உண்மையான விருத்தசேதனம் - உரோ 2:29.

 12. “ஆனால், அகத்தில் யூதராய் இருப்பவரே, உண்மையான யூதர். உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே, உண்மையான விருத்தசேதனம். அது, எழுதிய சட்டத்தின்படி, செய்யப்படுவது அல்ல. தூய ஆவியால், செய்யப்படுவதாகும். அத்தகையவர், மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே, பாராட்டுப் பெறுவர்” – உரோ 2:29.புதிய ஏற்பாட்டில், “இதயத்தில் விருத்தசேதனம்” “உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கு” கட்டுப்படுத்தும் திருமுழுக்குச் சடங்கால் நடைபெறுகிறது:
 1. பழைய ஏற்பாட்டின், “உடன்படிக்கை வார்த்தைகளுக்கு” ஒருவரை, கட்டுப்படுத்தும், “உடன்படிக்கைச் சடங்கு” விருத்தசேதனம் - தொ.நூ 17:11.

 2. அவ்வண்ணமே, புதிய ஏற்பாட்டில், “உடன்படிக்கை வார்த்தைகளுக்கு” ஒருவரை, கட்டுப்படுத்தும் “உடன்படிக்கைச் சடங்கு” “திருமுழுக்கு” – எசா 2:11-13.

விசுவாச சத்தியங்களும் - கட்டுப்படுத்தலும்:

 1. ஆரோன் மக்களை கட்டுப்படுத்த தவறியதால் - அவர்கள் தங்கள் மனம் போன போக்கின்படி வாழ்ந்து, கன்றுக்குட்டியை ஆராதித்தனர் - வி.ப 32:25.

 2. நாம் தவறும் போது, நம்மை தண்டித்து திருத்துபவரும், நம் எண்ணங்களுக்கு கட்டுப்பாடு வைப்பவரும், நமக்கு வேண்டும் - சீரா 23:2,3.

 3. நான் பாவத்தில் வீழ்ந்து போகும் சந்தர்ப்பங்களில், என்னை எச்சரித்து, கட்டுப்படுத்த, எனக்கு யார் வருவார்? – சீரா 22:27.

 4. நான் உங்களை, கடவுளின் வார்த்தைக்கு கட்டுப்படுத்துகிறேன் - பவுல் - தி.ப 20:32.

 5. மனித எண்ணங்கள், கிறிஸ்துவுக்கு கட்டுப்படுமாறு, நாங்கள் கட்டாயப்படுத்துகிறோம் - பவுல் - உரோ 10:5.

 6. திருச்சட்டத்தைக் கடைபிடிப்போர், தங்கள் எண்ணங்கனை கட்டுப்படுத்துகின்றனர் - சீரா 21:11.

 7. அவ்வண்ணமே, ஆவிக்குரிய திருச்சபையிலும், விசுவாசிகளை, சத்தியங்களுக்குள் கட்டுப்படுத்த, திருமுழுக்கு எனும் சடங்கு நடைபெறுகின்றது.

திருமுழுக்கும் - கட்டுப்பாடும்:

 1. திருமுழுக்கு நம்மை விசுவாச சத்தியங்களுக்கும், சபை ஒழுங்குகளுக்கும், கட்டுப்படுத்தும் சடங்கு.

 2. நாம் எந்த சபையில் திருமுழுக்கு எடுக்கின்றோமோ, அந்த சபையின் விசுவாச சத்தியங்களுக்கும், சபை ஒழுங்குகளுக்கும், அந்த திருமுழுக்கு நம்மை கட்டுப்படுத்துகின்றது.

 3. எந்த ஒரு போதனையும், மனிதனின் மனதை கட்டுப்படுத்த வில்லையென்றால், அவன் அந்த போதனையை, எளிதாகப் புறக்கணித்து விடுவான்.

 4. எனவே, யூத றாபீக்களும், யோவானும், இயேசுவின் சீடர்களும், தங்கள் போதனைகளுக்கு, ஒருவரைக் கட்டுப்படுத்த, அதை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு, திருமுழுக்கு எனும் சடங்கை நிறைவேற்றினர்.

 5. பின்பு, அபிஷேகத்தால் ஆவிக்குரியவர் ஆனவர்களை, மீட்பு அபிஷேக போதனைகளுக்கு கட்டுப்படுத்த, அவர்களுக்கு திருமுழுக்குச் சடங்கு நிறைவேற்றினர் - தி.ப 2:41.

“திருமுழுக்குச் சடங்கின்” - விளைவுகள்:

 1. உரிய முறையில் ஆயத்தம் செய்து நடத்தப்படும், திருமுழுக்குச் சடங்கானது, ஒரு விசுவாசியில், பெரும் தாக்கத்தை உருவாக்கும்.

 2. இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கும் போது உண்டாகும் விசுவாச அனுபவம், திருமுழுக்குச் சடங்கால், இன்னும் உறுதியடைந்து, அது “திருமுழுக்கு அனுபவமாகவே” மாறும்.

 3. இந்த “உருமாற்றும் - அனுபவத்தை”, திருமுழுக்குப் பெற்ற, ஆதி ஆவிக்குரிய விசுவாசிகள் உணர்ந்தார்கள்.A. சில திருமுழுக்கு அனுபவங்கள்
a. “திருமுழுக்கு அனுபவம்:

 1. திருமுழுக்கு ஒருவருக்கு, மனமாற்ற அனுபவத்தை தருகிறது - மத் 3:11, தி.ப 13:24.

 2. திருமுழுக்கின் போது, ஒருவர் தன் பாவங்களை அறிக்கையிடுகின்றார் - மாற் 1:5, தி.ப 22:16.

 3. தண்ணீரில் மூழ்கி எழும் திருமுழுக்கு, இயேசுவோடு ஒருவர், இவ்வுலகின் துன்பங்களில் மூழ்கி எழும்பும், அனுபவத்தைத் தருகிறது - மாற் 10:38.

 4. திருமுழுக்கின் போது, ஒருவர் தான் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை, முழுமையாக அனுபவிக்கிறார் - மாற் 16:16.

 5. திருமுழுக்கில் ஒருவர், மனமாற்றத்தையும், பாவ மன்னிப்பையும் அனுபவிக்கிறார் - லூக் 3:3.

 6. திருமுழுக்கின் போது ஒருவர், கடவுளின் நீதிநெறிகளை ஏற்றுக்கொள்கிறார் - லூக் 7:29.

 7. திருமுழுக்குப் பெறுபவர், முதல் பெந்தக்கோஸ்து நாளில், ஆதிசபை பெற்ற அனுபவத்தை, தாமும் பெறுகின்றார் - தி.ப 2:38,41.

 8. திருமுழுக்குப் பெறுபவர், இறையாட்சியின் அனுபவத்துக்குள் வருகிறார் - தி.ப 8:12.

 9. இயேசு கிறிஸ்துவை, விசுவசித்து ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒருவர் திருமுழுக்கால் அவரோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார் - 1பேது 3:21.

 10. திருமுழுக்குப் பெறுவது என்பது, ஒருவர் ‘மெசியா வந்துவிட்டார்” என்று ஏற்றுக்கொள்வதற்கு அடையாளம் ஆகும் - யோவா 1:25.

 11. திருமுழுக்கால் ஒருவர், மூவொரு கடவுளோடு உறவு கொள்கிறார் - மத் 28:2-19.


b. “கிறிஸ்து அனுபவம்:

 1. தண்ணீரில் திருமுழுக்குப் பெறுவதால், ஒருவர் வெளிப்படுத்தப்பட்ட மெசியாவைக் கண்டு கொள்கிறார் - யோவா 1:31.

 2. திருமுழுக்கால் ஒருவர், கிறிஸ்துவின் வாழ்விலும், சாவிலும் இணைந்திருப்பதை அனுபவிக்கிறார் - உரோ 6:3.

 3. திருமுழுக்கினால் ஒருவர், இயேசுவோடு அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழும் அனுபவத்தைப் பெறுகிறார் - உரோ 6:4, கொலோ 2:12.

 4. திருமுழுக்குப் பெறுபவர், தூய ஆவியால், கிறிஸ்து என்னும் உடலாகிய சபையின் உறுப்பினராகும் அனுபவம் பெறுவார் - 1கொரி 12:13.

 5. திருமுழுக்கால் ஒருவர், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் அனுபவம் பெறுகின்றார் - கலா 3:27.B. “திருமுழுக்கு அனுபவமும் - ஊனியல்பு களையப்படுதலும்”

 1. பழைய ஏற்பாட்டின், உடன்படிக்கைச் சடங்கு – “விருத்தசேதனம்” – தொ.நூ 17:11.

 2. “உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். இதுவே, உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள, உடன்படிக்கையின் அடையாளம்” – தொ.நூ 17:11.

 3. புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கைச் சடங்கு, “திருமுழுக்கு” – 1பேது 3:21.

 4. பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம், மனிதர் கையால் அளிக்கப்படும், ‘ஊனைக்களையும் சடங்கு’ – தொ.நூ 17:23, 21:4.

 5. “பின் ஆபிரகாம், தம் மகன் இஸ்மயேலுக்கும், தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டிலிருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே, அதே நாளில், அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்” – தொ.நூ 17:23.

 6. ஆனால், புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு, கிறிஸ்துவால் அளிக்கப்படும், “ஊனியல்பைக்” களையும் சடங்கு – கொலோ 2:11-12.

 7. “நீங்கள் மனிதக் கையால், விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. கிறிஸ்துவோடு, இணைந்திருப்பதால், அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு, ஊனியல்பை களைந்துள்ளீர்கள்” – கொலோ 2:11.

 8. விசுவாசியின் “ஊனியல்பு களையப்படுவது”, புதிய ஏற்பாட்டின் விருத்தசேதனம் என்னும், திருமுழுக்குச் சடங்கினால் - கொலோ 2:11, 1பேது 3:21.

 9. இதை, கிறிஸ்துவே செய்கிறார் - கொலோ 2:11.


இனி, திருமுழுக்கால் ஒருவரின் ஊனியல்பு எவ்வாறு களையப்படுகிறது என்று பார்ப்போம்:
 1. புதிய ஏற்பாட்டில், திருமுழுக்கானது ஒருவரின் மனதை, விசுவாச சத்தியங்களுக்கும், தீர்மானங்களுக்கும் “கட்டுப்படுத்தும் சடங்கு” ஆகும்.

 2. இது எவ்வாறு நடைபெறுகிறது என்று காண்போம்.

 3. “மனம்” என்பது, மனிதனை மனிதனாக மாற்றும் “தீர்மான சக்தி”.

 4. “ஊனியல்பு” என்பது, மனித இயல்புக்குள்ளேயே, உறைந்திருக்கும் ஓர் “எதிர்சக்தி”.

 5. “ஆவியின் இயல்பு” என்பது, ஒருவருக்குள் விசுவாசம் செயலாற்றும் போது, அவர் “மீட்பில் வாழ” கடவுள், தூய ஆவி வழியாக, அவருக்கு அளிக்கும் “விஷேச கிருபை” ஆகும்.

 6. “ஊனியல் மனநிலை” கடவுளின் விருப்பங்களுக்கு கட்டுப் படுவதில்லை – உரோ 8:7.

 7. “ஏனெனில், ஊனியல் மனநிலை, கடவுளுக்குப் பகையானது. அது, கடவுளின் சட்டத்திற்கு, கட்டுப்பட்டிருப் பதில்லை. இருக்கவும் முடியாது” – உரோ 8:7.

 8. அது கடவுளுக்குப் பகையானது என்றும் பார்க்கிறோம்.

 9. ஒருவர் விசுவசித்து, மீட்படைந்து, திருமுழுக்குப் பெறும் போது, அவர் கிறிஸ்துவோடு இணைந்து, ஆவியின் இயல்புகளைப் பெறுகிறார் - யோவா 7:39, தி.ப 16:31, 19:2, கலா 3:27.

 10. “கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி, திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும், கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்” – கலா 3:27.

 11. “இந்த ஆவியின் இயல்பு”, ஒருவருக்குள் நுழையும் போது, அவருக்குள் இருக்கும் ஊனியல்பு “அதை எதிர்க்கும்” – கலா 5:17.

 12. “ஊனியல்பின் இச்சை, தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம், ஊனியல்புக்கு முரணானது. இவை, ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால், நீங்கள் செய்ய விரும்புவதை, உங்களால், செய்ய முடிவதில்லை” – கலா 5:17.

 13. இப்போது, ஒருபக்கம் “ஊனியல்பு” மறுபக்கம், “ஆவியின் இயல்பு” – உரோ 8:4.

 14. “ஊனியல்பிற்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம்” – உரோ 8:24.

 15. இந்த இரண்டுக்கும் மத்தியில், “மனம்” செயலாற்ற வேண்டும் - உரோ 13:14, 1பேது 2:11.

  “தீய இச்சைகளைத் தூண்டும், ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்” – உரோ 13:14.

  “நீங்கள், அன்னியரும் தற்கால குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர் புரியும், ஊனியல்பின் இச்சைகளை, விட்டுவிடும் படி, உங்களை வேண்டிக்கொள்கிறேன்” – 1பேது 2:11.

 16. இங்கே மனம், ஆவியின் இயல்பு பக்கம் திரும்பினால், ஊனியல்பு தோல்விகண்டு சாகும்.

 17. ஆனால், “மனம், - ஆவியின் இயல்பு” பக்கம் சாய்வது எங்ஙனம் என்று தொடர்ந்து பார்ப்போம்.திருமுழுக்குக்கு ஆயத்தமும் - மனதை கட்டுப்படுத்தும் திருமுழுக்கும்:
 1. இங்கேதான், “திருமுழுக்குக்கான ஆயத்தம்” வேலை செய்கிறது.

 2. விசுவாச அனுபவத்திலும், விசுவாச செயல்களிலும், எடுக்கப்படும் “தீர்மானங்கள்”, அறியும் “விசுவாச சத்தியங்கள்” இவற்றுக்குள் “திருமுழுக்குக்கு ஆயத்த வேளையில்” ஒருவர் தன்னை “அடக்கம் செய்கிறார்”.

 3. இங்கே மனம், ஒருவகையில் “கட்டாயப்படுத்தப்படுகிறது”.

 4. அதை பவுல் கூறும்போது, “மனித எண்ணங்களை, கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வர, நாங்கள் கட்டாயப் படுத்துகிறோம்” – 2கொரி 10:5 – என்பார்.

 5. “திருமுழுக்கு ஆயத்தம்” என்பது, “மனதை ஆவிக்குள் கட்டுப்படுத்தும்” ஒரு தீவிர “பயிற்சி” ஆகும்.

 6. இதை, திருமுழுக்குக்கு முன்பு, ஒரு விசுவாசி பெறுகிறார்.

 7. இவ்வாறு, “திருமுழுக்கு” என்ற ஒரு “ஒப்பந்த சடங்கால்” ஒருவர், “ஆவியின் இயல்புக்கு” தன்னைக் கட்டுப்படுத்துகிறார்.

 8. அப்போது, அவருக்குள் உறைந்திருக்கும், ஊனியல்பு, பலம் குன்றி, பயனற்றுப் போய், சாகடிக்கப்படும்.

 9. இங்கே தான், “மனமாற்றம் செயலில் காட்டப்படுகிறது” – மத் 3:8.

 10. “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை, அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” – மத் 3:8.கட்டுப்படுத்தும் திருமுழுக்கு:
 1. இங்கே, திருமுழுக்கு என்பது, ஒரு விசுவாசியின் மனதை, “ஆவியின் இயல்புக்கு” கட்டுப்படுத்தி, கடவுளோடு இணைக்கும் ஒரு, “ஒப்பந்தச் சடங்கு” என்று பார்த்தோம்.

 2. இந்த ஒப்பந்தம், வெறும், மனித சக்திகளால் நடப்பது அல்ல.

 3. 1. கடவுள், 2. தேவ கிருபை, 3. மனிதனைப் பற்றிய கடவுளின் திட்டம், 4. விடுதலைக்காக ஏங்கும் மனித மனம், இவை எல்லாம் ஒருங்கிணைந்து, செயல்படும்போது, இந்த “ஒப்பந்தம்” உருவாகிறது.

 4. இதையே சுருக்கமாக, “திருமுழுக்குக்கு ஆயத்தம்” என்று கூறுகிறோம்.வேதத்தில் - ஊனியல்பு:
ஊனியல்பு என்றால் என்ன?


முன்னுரை :

ஊனியல்பின் “செயல்களும்”, “ஊனியல்பும்”:

 1. ஊனியல்பைப் பற்றி, பைபிள் கூறும்போது, கலா 5:19, கொலோ 3:5-10 – ல், பல “தீய செயல்கள்” கூறப்படுகின்றன.

 2. “ஊனியல்பின் செயல்கள், யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி.... சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம், முதலியவை ஆகும்” – கலா 5:19.

 3. இந்த செயல்களெல்லாம், “ஊனியல்பின்” செயல்கள்.

 4. அப்படியென்றால், “ஊனியல்பு” என்பது என்ன? என்று அறிவோம்.

 5. இதற்கு, இயேசுவே ஒரு நல்ல விளக்கம் தருகிறார் - மத் 15:15-20.

 6. “ஏனெனில், கொலை, விபச்சாரம், பரத்தமை, களவு, பொய்சான்று, பழிப்புரை, ஆகியவற்றை செய்யத்தூண்டும், தீய எண்ணங்கள், உள்ளத்திலிருந்து வெளி வருகின்றன” – மத் 15:19.

 7. இங்கே, “ஊனியல் செயல்களாக” இயேசு கூறுபவை, கொலை, விபச்சாரம், பரத்தமை, களவு, பழிப்புரை, போன்றவை.

 8. ஆனால், “ஊனியல்பு” என்பது, “இந்தச் செயல்களைச் செய்யத் தூண்டும், தீய எண்ணங்களே” – மத் 15:19.

 9. “ஏனெனில், கொலை, விபச்சாரம், பரத்தமை, களவு, பொய்சான்று, பழிப்புரை, ஆகியவற்றை செய்யத்தூண்டும், தீய எண்ணங்கள், உள்ளத்திலிருந்து வெளி வருகின்றன” – மத் 15:19.

 10. எனவே, ஒருவருக்குள் இருக்கும் “ஊனியல்பு” என்பது, அவரது, பாவச் செயல்களைச் “செய்யத் தூண்டும் தீய எண்ணங்களே”.


வேதத்தில் - ஊனியல்பு:
1. ஊனியல்பின் விளைவு

2. பவுல் கூறும் ஊனியல்பின் அனுபவம்

3. நம் ஊனியல்பை போக்க, இயேசு ஊனியல்பை தாங்கினார்

4. ஊனியல்பும் - ஆவிக்குரிய இயல்பும்

5. ஊனியல்பின் விளைவு

6. ஊனியல்பு – கடவுளுக்குப் பகையானது

7. ஊனியல்பைக் களையக் கட்டளை

8. அபிஷேகம் பெற்றவரில் ஊனியல்பு

9. ஊனியல்பினர் இறையாட்சியில் வாழ முடியாது

10. ஊனியல்பு தூய ஆவிக்குப் பகையானது

11. “ஊனியல்பின் செயல்கள்”:

12. ஊனியல்பை வெல்ல வழி:

13. ஊனியல்பின் வாழ்வு, பழைய வாழ்வு:

14. ஊனியல்பில் வாழ்பவர்கள்: